கேரளாவிற்கு கஞ்சா கடத்திய இருவர் கைது; 16 கிலோ பறிமுதல்

கேரளாவிற்கு கஞ்சா கடத்திய இருவர் கைது; 16 கிலோ பறிமுதல்
X
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தேனி வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்திச் சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து டூ வீலரில் கேரளாவிற்கு கஞ்சா கடத்திச் சென்ற இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பதினாறு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் அஜய். கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவர்கள் இருவரும் திண்டுக்கல்லில் இருந்து டூ வீலரில் தேனி வந்து கொண்டிருந்தனர்.

அல்லிநகரம் எஸ்.ஐ., கவுதமன், அன்னஞ்சி விலக்கு அருகே இவர்களது வாகனத்தை மறித்து சோதனை செய்தார். அதில் பதினாறு கிலோ கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த எஸ்.ஐ., இருவரிடம் விசாரணை நடத்திய போது, கஞ்சாவை அவர்கள் கேரளாவிற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இருவரையும் கைது செய்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!