ஆடி முதல் வெள்ளி: கோயில்களில் கொண்டாட்டம்

ஆடி முதல் வெள்ளி: கோயில்களில் கொண்டாட்டம்
X
தேனி மாவட்டத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை இன்று கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு பின்னர், கோயில்கள் சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டன. கோயில்கள் திறக்கப்பட்ட பின்னர் வரும் பெரும் திருவிழா, ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை. இதனால் தேனியில் உள்ள பெத்தாட்ஷி விநாயகர் கோயிலில் சுவாமி வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீரபாண்டி கவுமாரியம்மன், அல்லிநகரம் கவுமாரியம்மன், தேனி சுடுகாட்டு காளியம்மன், தேனி துர்க்கையம்மன் கோயில்களில் காலை முதல் இரவு வரை பக்தர்கள் விளக்கேற்றியும், பொங்கல் வைத்தும், கூழ் காய்ச்சி ஊற்றியும் வழிபாடு நடத்தினர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி