நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

தேனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி பங்களாமேட்டில் தேனி மாவட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் சங்க தலைவர்கள் பன்னீர்செல்வம், அழகர்சாமி ஆகியோர் தலைமையில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும்.

பணி வரன்முறை செய்யப்படாத 5 ஆயிரம் பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும், கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நியாயவிலைக்கடை பணியாளருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு பின், பணியாளர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!