Theni to Chennai Train-தேனி-சென்னை ரயில் எத்தனை மணிக்கு தெரியுமா?

Theni to Chennai Train-தேனி-சென்னை ரயில் எத்தனை மணிக்கு தெரியுமா?
X

theni to chennai train-தேனி சென்னை ரயில் (கோப்பு படம்)

தேனியில் இருந்து சென்னை சென்ற ரயில் தற்போது போடி வரை செல்கிறது. ஏற்கனவே மீட்டர் கேஜாக இருந்த தேனி-போடி அகல பாதையாக மாற்றப்பட்ட பின்னர் இந்த சேவை நீட்டிப்பு செய்யப்பட்டது..

Theni to Chennai Train

சென்னை - தேனி ரயில் சேவை நேரம்

ரயில் எண் 20601, எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் இரவு 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு காலை 7.10 மணிக்கு மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து காலை 7.15 மணிக்கு உசிலம்பட்டியில் இருந்து 8.01 மணிக்கும், ஆண்டிப்பட்டியில் இருந்து 8.21 மணிக்கும், தேனியிலிருந்து 8.40 மணிக்கும், போடிக்கு 9.35 மணிக்கும் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், போடியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் ரயில் எண் 20602, தேனியில் இருந்து இரவு 8.52 மணிக்கும், ஆண்டிபட்டியில் இரவு 9.10 மணிக்கும், உசிலம்பட்டியில் இரவு 9.30 மணிக்கும், இரவு 10.45 மணிக்கு மதுரை சென்றடையும். இரவு 10.50 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட்டு காலை 7.55 மணிக்கு சென்னை சென்றடையும்.

போடிநாயக்கனூர் முதல் சென்னை வரை செல்லும் இந்த ரயில் கரூர், சேலம், ஜோலார்பேட்டை வழியாக சென்னை சென்ட்ரல் நிலையம் வந்து சேரும்.

Theni to Chennai Train

மதுரை - தேனி

அதேபோல, ரயில் எண் 06702 தேனி - மதுரை முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயில் (தினமும்) போடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாரம் மும்முறை

அந்தவகையில், ரயில் எண் 20602 மதுரை - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் போடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமை என வாரத்தில் மூன்று நாட்களில் இயக்கப்படுகிறது.

மதுரை - போடி அகல ரயில் பாதை மாற்றும் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல் - மதுரை விரைவு ரயில் போடிவரை நீட்டிக்க தெற்கு ரயில்வே முன்மொழிந்தது. அதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த சேவை வந்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து போடிக்கும், மதுரையில் இருந்து போடிக்கும் ரயில் சேவை ஜூன் 16 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த ரயில் சேவையை ஜூன் 15ஆம் தேதி மத்திய அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Theni to Chennai Train

மதுரை - தேனி ரயில் சேவை நேரம்

அதே நேரத்தில், முன்பதிவில்லா பாசஞ்சர் ரயில் எண் 06701 மதுரையில் இருந்து காலை 8.20 மணிக்கும், வடபழஞ்சி 8.35 மணிக்கும், உசிலம்பட்டியில் 9.05 மணிக்கும், ஆண்டிபட்டியிலிருந்து 9.25 மணிக்கும், தேனியில் இருந்து 9.44 மணிக்கும், போடிக்கு 10.30 மணிக்கும் சென்றடையும். அதற்குப் பதில் ரயில் எண் 06702 அன்று மாலை 5.50 மணிக்கு போடியில் இருந்து மாலை 6.15 மணிக்கும், தேனியில் இருந்து மாலை 6.34 மணிக்கும், ஆண்டிபட்டியில் 6.34 மணிக்கும், உசிலம்பட்டியில் 6.54 மணிக்கும், வடபழஞ்சியில் இரவு 7.25 மணிக்கும், இரவு 7.50 மணிக்கு மதுரை சென்றடையும்.

Tags

Next Story