the village of cooks in tamilnadu-ஆஹா..! என்ன சுவை..! யாருங்க சமையல்..? ..! முன்பதிவு முக்கியம்ங்கோ..!
-கலையூர் சமையல் கலைஞர்கள் (கோப்பு படம்)
எத்தனையோ விஷயங்களுக்கு பெருமை சேர்க்கும் தமிழக மாவட்டங்கள் சமையலுக்கும் ஒரு பெருமையை சேர்க்கிறது, ஒரு மாவட்டம். அது கடலூர் மாவட்டம். அட ஆமாங்க கடலூர் மாவட்டத்தில் கலையூர் என்ற ஒரு ஊரு. அந்த ஊரில் உள்ள அவ்வளவு பேரும் சுவையாக சமைக்கத்தெரிந்த சமையல் வல்லுனர்களாம்.
அட வாங்க.. அதைப்பற்றி கொஞ்சம் விரிவாக இந்த கட்டுரையில் பார்ப்போம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் கலையூர். அந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் சமையலில் வல்லவர்கள். கலையூர் என்றாலே "சமையல்களின் கிராமம்" என்பதுதான். சுவையாக சமைக்கும் செஃப் அளவிலான சமையல்காரர்கள்.
the village of cooks in tamilnadu-
கலையூர் கிராமத்தில் கிட்டத்தட்ட 200 ஆண்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே சமையல்கலைஞர்கள் என்பதுதான் சிறப்பு.
ஏன் சமையல்காரர்கள் ஆனார்கள் ..?
அதுக்கு ஒரு வரலாறே உள்ளது என்பது ஆச்சர்யம்தான். ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பு, விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, தெலுங்கர்கள் இன சாதிகள் அல்லது வடுகர் சாதியினர் அப்போதைய தமிழ்நாட்டு பகுதிக்கு இடம்பெயர்ந்து, நாயக்கர் சாம்ராஜ்யத்தை நிறுவி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறினார்கள்.
அவர்களில் பெரும் செல்வந்தர்களாகவும் பணக்காரர்களாகவும் அறியப்பட்ட ரெட்டியார்களும் கடலூர் பகுதியில் குடியேறினர். அவர்கள் குடியேறிய பிறகு அவர்கள் தங்கள் திருமணங்கள் மற்றும் விழாக்களுக்கு சமைக்கும் சமையல்காரர்களைத் தேடுவதில் சிரமப்பட்டனர்.
ஆட்கள் இல்லை
பொதுவாக பாரம்பரிய பிராமண ஆண்கள் சமைக்கும் வழக்கத்தில் இருந்தார்கள். ஆனால், கடலூர் பகுதியில் பிராமணர்கள் அருகில் இல்லாததால், அவர்கள் அருகிலுள்ள கலையூரில் வாழ்ந்த வன்னிய மக்களை பயிற்சியாளர்களாக சேர்த்து அவர்களுக்கு சமையல் பயிற்சி அளித்தனர். அவர்கள் சமைக்கும் சமையல் விருந்து சுவையாக சூப்பராக அமைந்தது. ஒரு சமையல் மாஸ்டரிடம் சேர்ந்து பயிற்சி பெற்று அவர்களும் பிரபல சமையல் கலைஞர்களாக மாறினார்கள்.
the village of cooks in tamilnadu-
கிராமமே சமையல் கலைஞர்கள்
காலப்போக்கில், அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் சமையலில் சேர ஆரம்பித்தனர். இப்படியாக அவர்கள் சமையலில் வல்லுனர்கள் ஆனார்கள். பின்னர் இந்த ஊர் ஆண்களுக்கு சமையலே முழுநேர தொழிலாக மாறியது. பரம்பரைத் தொழில் என்பதுபோல கலையூர் ஆண்களுக்கு சமையல் அவர்களது தொழிலாக மாறிப்போனது.
இந்த சமையல்காரர்கள் மிகவும் பிரபலமானவர்கள். பல பணக்கார குடும்பங்கள், அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்கள் போன்றவர்களின் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளின் போது கலையூர் சமையல் கலைஞர்களையே அழைக்கிறார்கள்.
ஜூனியர் சமையல்காரர்களுக்கு முறையான போதனைகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் ஒரு மூத்த சமையல் கலைஞரிடம் சேர விரும்பும் ஜூனியர்கள் மூத்த சமையல்காரர் ஆவதற்கு, மூத்த சமையல் கலைஞரிடம் குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.
the village of cooks in tamilnadu
ஆறு மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு
இப்படி புகழ்பெற்ற இந்த சமையல் கலைஞர்களை சமைக்க அழைப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். அந்த அளவுக்கு அவர்கள் பிசியோ..பிசி. ஒவ்வொரு விழாவிற்கும் 15 ஆண்கள் மட்டுமே வருகை தருவார்கள். 3 மணி நேரத்தில் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் சமைத்து முடிக்கும் திறன்பெற்றவர்கள் என்றும் கூறப்படுகிறது. தென்னிந்திய உணவுகள் மற்றும் வட இந்திய உணவு வகைகளில் எந்த உணவாக இருந்தாலும் சுவையாகவும் தரமாகவும் தரக்கூடியவர்கள். இந்த சமையல் கலைஞர்கள் சமைப்பதற்காக பல வெளிநாடுகளுக்கும் அழைக்கப்படுகிறார்கள் என்பது அவர்களின் திறமைக்கு கிடைத்த வெகுமதி.
the village of cooks in tamilnadu
சமையலுக்கு அவர்களை பதிவு செய்துவிட்டால், முதலில் தலைமைச் சமையற்காரரைச் சந்தித்து 6 மாதங்களுக்கு முன்பே என்னென்ன உணவு வகைகள் சமைக்கவேண்டும் என்பதற்கான உணவுப் பட்டியலை வழங்க வேண்டும். ஏனெனில் அதற்குத் தக்கவாறு மூத்த சமையல் கலைஞர் வேலைக்கு ஆட்களை தயார்செய்து அனுப்புவார்.
கடந்த 500 ஆண்டுகளில் இருந்து இவர்கள் தமிழ் உணவு வகைகளில் சுவையின் ரகசியங்களை அறிந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இனிமேல் உங்க வீட்டு விசேஷத்துக்கும் கலையூர் சமையல் கலைஞர்களை முன்பதிவு செய்து அசத்துங்க.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu