வேலியே பயிரை மேய்ந்தது: சினிமாவிற்கு சென்ற இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த போலீஸ்காரர்
கோப்பு படம்
இரவில் சினிமாவிற்கு சென்று திரும்பிய இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த போலீஸ்காரரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். வேலியே பயிரை மேய்ந்தது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் பிரதான நகரைச் சேர்ந்த 45 வயதான அவர் பைபாஸ் ரோட்டில் கடை வைத்துள்ளார். இவரது கடையில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் சினிமா பார்க்க தனது கடை ஊழியர்கள் அனைவரும் நகரில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்றனர். அங்கு சினிமா முடிந்து நள்ளிரவு ஒரு மணிக்கு அந்த இளம்பெண்ணை வீட்டில் விடுவதற்காக தனது பைக்கில் உரிமையாளர் அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளார்.
அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த 2 போலீசார் அவர்களை வழிமறித்தனர். அப்போது ஒரு போலீஸ்காரர் கடை உரிமையாளரிடம் இந்த நேரத்தில் எங்கு சென்று வருகிறீர்கள்? நீங்கள் இருவரும் யார்? என்று விசாரித்துள்ளார்.
அப்போது அவர் தனது கடையில் வேலை பார்ப்பவரை சினிமாவுக்கு அழைத்து சென்று வருவதாக கூறி அதற்கான ஆதாரமாக டிக்கெட்டுகளை காட்டியுள்ளார். பின்னர் அந்த போலீஸ்காரர் கடை உரிமையாளரை தனியாக அழைத்துச் சென்று அந்தப் பெண் குறித்து முழு விவரங்களை கேட்டுள்ளார். அப்போது 22 வயதான அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அவரது பெற்றோருக்கு தெரிந்து தான் படம் பார்க்க சென்றதாக போலீஸ்காரரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் தன்னிடம் இருந்த மற்றொரு போலீஸ்காரரை வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறிவிட்டு அந்த போலீஸ்காரர் மட்டும் கடை உரிமையாளரை தொடர்ந்து மிரட்டியுள்ளார். பின்னர் அவரிடமிருந்து ரூபாய் 11,000 ரூபாய் ஏடிஎம் கார்டு டிரைவிங் லைசென்ஸ் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை அங்கிருந்து செல்லும்படி விரட்டி அடித்துள்ளார். ஆனால் கடைக்காரர் அந்த பெண்ணை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு கேட்டபோது நான் வீட்டில் சென்று பாதுகாப்பாக விட்டுவிடுகிறேன் என்று போலீஸ்காரர் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸ்காரர்கள் மிரட்டலுக்கு பயந்து கடைக்காரர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
போலீஸ்காரர் அந்த பெண்ணிடம் நான் சொல்வதைக் கேட்டால் விடுவதாக மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்துபோன அந்த பெண் தன்னை விட்டுவிடும்படி போலீஸ்காரரிடம் கெஞ்சியுள்ளார்.
ஆனால் போலீஸ்காரர் மறுத்துவிட்டார். தொடர்ந்து அந்த இளம்பெண்ணை நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு யாரிடமும் கூறினால் மீண்டும் வழக்கு செய்து உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டி விட்டு, ஆட்டோவில் ஏற்றி அந்த பெண்ணின் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதற்கிடையே அந்த பெண்ணுக்காக அந்த பெண்ணின் வீட்டில் கடையின் உரிமையாளர் காத்திருந்தார்.
ஆட்டோவில் வந்த அந்தப் பெண் இறங்கிய பின்னர் அவர் தன் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து இருக்கிறார். அவருக்கு அவருடைய சேர்ந்த ஒருவருடன் இரண்டாவது திருமணம் நடத்த பெற்றோர் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று சினிமாவுக்கு சென்று திரும்பியபோது போலீஸ்காரரா அந்தப் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளார். மேலும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வீட்டில் தெரிவிக்காமல் அவள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன் பின்னரே அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று காப்பாற்றியுள்ளனர். அதன் பின்னர்தான் பெற்றோர்கள் இந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவர் போலீஸ்காரரை கடத்தி செல்லப்பட்டு நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு இடத்தில் கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்து கடையின் உரிமையாளர் தங்களுக்கு நேர்ந்த, அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தெரிவித்தார். அப்போது அங்கிருந்து உதவி கமிஷனர் சம்பவம் குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் திலகர் திடல் போலீஸ் நிலையத்தில் குற்றப் பிரிவில் பணிபுரியும் முருகன் நாற்பத்தி ஒன்று என்பதும், அவருடன் இருந்த மற்றொருவர் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
பின்னர் இந்த சம்பவம் நடந்த இடம் திருடன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்று கூறி அங்கு சென்று புகார் அளிக்குமாறு அவர்களுக்கு உதவினர். இது குறித்து போலீஸ் கமிஷனர் பிரம்மாவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவம் குறித்து துணை கமிஷனரிடம் விசாரிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணைக்குப்பின் குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டு போலீஸ்காரர் முருகனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகன் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வேலியே பயிரை மேய்ந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu