கோடை தாகம் தணிக்க நம்ம ஊரு.. மண் பானை தண்ணி குடிங்க..!

கோடை தாகம்  தணிக்க  நம்ம ஊரு.. மண் பானை தண்ணி குடிங்க..!
X

மணல் பரப்பிய குடிநீர் மண் பானை.

மண் பானையில் தண்ணீர் சேமித்து வைத்துக் குடிக்கும் பழக்கம் மிகச் சிறந்த ஆரோக்கியப் பழக்கமாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்

மண் பானையில் தண்ணீர் சேமித்து வைத்துக் குடிக்கும் பழக்கம் மிகச் சிறந்த ஆரோக்கியப் பழக்கமாக நமது தமிழக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சுவாசிக்கும் பானை: வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாத்திரங்களோ மற்ற பாத்திரங்களோ, ஃபிரிட்ஜோ சுவாசிக்காது. ஆனால், மண் பானை சுவாசிக்கும். வெளியில் உள்ள காற்றை உள்ளே கொண்டு வரும்.

இயற்கை குளிர்ச்சி: மண் பானை தண்ணீரை மூடி வைத்தாலும் ஆவியாகும். அதனால்தான் மண் பானை தண்ணீர் குளிர்ச்சியாக மாறுகிறது. மண் பானையில் உள்ள நுண்ணியத் துளைகள் மூலமாக மண் பானை சுவாசிக்கும். இது ஆவியாகத் தேவையான வெப்பத்தைத் தருவது இந்த மண் பாண்டம்தான். இதன் செயல்முறைக்குப் பெயர் 'பிசிக்ஸ் பாலிசி'.

கனிமங்கள்: மண் பானை தண்ணீரில் கனிம வளங்கள் ஏராளமான உள்ளன. பல கனிமச்சத்துகளின் மிக முக்கிய கூறுகள் எல்லாம் மண் பானை தண்ணீரில் இருக்கும். மண்ணில் உள்ள கனிமங்கள், நானோ, பிக்கா அளவுகளில் தண்ணீரோடு கலந்து இருப்பதால் நம் உடலுக்கு நல்லது. நம் ஆயுட்காலம் அதிகரிக்கும்.மண் பானை தண்ணீர் குடித்தால் உடலில் உள்ள வெப்பம் நீங்கி குளிர்ச்சியாகும்.வெயில் காலத்தில் வரக்கூடிய சாதாரண உடல் பிரச்சனைகள் முதல் பெரிய பிரச்னைகள் வரை வராமல் பாதுகாக்கும்.

மண் பானையில் சின்ன வெட்டிவேரை முடித்து வைத்து, அந்தத் தண்ணீருக்குள் போடுவார்கள். அதில் மனம் இருக்கும். மருத்துவக் குணங்களும் சேரும். மண் பானை தண்ணீரைக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது எரிகின்ற எரிச்சல் குறையும். தொடர்ந்து ஃப்ரிட்ஜ் தண்ணீர் குடித்தால் சிறுநீர் எரிச்சலாகப் போகும்.மண் பானையில் உள்ள தண்ணீர் ஆல்கலைன் தண்ணீராக மாறும். இது உடலில் உள்ள புண்களை ஆற்றும். உடலின் அமிலத்தன்மையைக் குறைக்கும். அமிலமான உணவுகளைச் சாப்பிட்டு இருந்தாலும், அதன் வீரியத்தைக் குறைக்க மண் பானை தண்ணீரைக் குடித்துப் பயன் பெறலாம்.

சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க மண் பானைத் தண்ணீர் உதவும்.தொடர்ந்து மண் பானை தண்ணீர் குடிப்பவருக்கு, ரத்தம் சுத்தமாகும். கழிவுகள் வெளியேறும்.உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் போன்ற சமநிலை இல்லாதோருக்கு, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி ஆரோக்கிய நிலைக்கு மாற்றும்.

தண்ணீரில் உள்ள நச்சுக்களை, கழிவுகளை நீக்குவது மண் பானைதான். இது ஒரு இயற்கை ஃபில்டர். மண் பானை பயன்படுத்தும் முறை.மண் பானையைத் தட்டிப் பார்த்து வாங்க வேண்டும்.மண் பானை லேசாக இல்லாமல் கணமாக இருந்தால், எளிதில் விரிசலாகாது.மண் பானையை வாங்கிச் சாதாரண நாரால் எந்த கெமிக்கல்களும் போடாமல் அதில் உள்ள அழுக்குகள், தூசிகள் நீங்கும்படி சாதாரணத் தண்ணீரால் கழுவ வேண்டும்.

தண்ணீரை ஒரு நாள் ஊற்றி வைத்துவிட்டு, அந்தத் தண்ணீரை அப்படியே விடுங்கள். இதை யாரும் குடிக்கக் கூடாது. பின்னர் கீழே ஊற்றிவிடவும். கழுவிவிட்டு பின்னர் மீண்டும் இதையே அடுத்த நாள் செய்யுங்கள்.கஞ்சி தண்ணீர் இருந்தால் அதை ஊற்றி ஒரு நாள் அப்படியே விட்டு பின்னர் நன்கு கழுவிவிடுங்கள். பிறகு நீங்கள் தண்ணீர் ஊற்றிப் பயன்படுத்தப் பானை தயார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது