இரண்டு மணமக்களின் திருமணத்தை நடத்திவைத்த முதல்வர்

இரண்டு மணமக்களின் திருமணத்தை நடத்திவைத்த முதல்வர்
X

இரண்டு மணமக்களுக்கான திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இரண்டு மணமக்களின் திருமணத்தை நடத்திவைத்த முதல்வர் சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வை நிறைவு செய்திடும் விதமாக, இரண்டு மணமக்களுக்கான திருமணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வை நிறைவு செய்திடும் விதமாக, இரண்டு மணமக்களுக்கான திருமணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்தைத் திருக்கோயில்களே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை, திருவான்மியூர், திருக்கோயில் திருமண மண்டபத்தில் 4.12.2022 அன்று சென்னை இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட திருக்கோயில்கள் சார்பில் 25 மணமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மொத்தம் 500 மணமக்களுக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. மேலும், திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்ட திட்டச் செலவினத்தொகையை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.

2023-2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், "பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.50,000/- மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 500 இணைகளுக்கு திருக்கோயில் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!