மதுக்கூர் அருகே விவசாயிகளுக்கான கிராம மேலாண்மை குழு கூட்டம்
விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம் சொக்கனாவூர் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கிராம மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு சொக்கனாவூர் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா பழனிவேல் உதவியுடன் கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விவசாயிகளுக்கான கூட்டம் மற்றும் திட்ட விளக்கங்கள் குறித்த கருத்து காட்சியும் சொக்கனாவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தலைமையில், சொக்கனாவூர் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா பழனிவேல் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்ந்த திட்டங்கள், தமிழ்நாடு பசுமை பரவலாக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்படுவது மற்றும் கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் தார்ப்பாய் கைத்தெளிப்பான் சிங்சல்பேட் ஜிப்சம் போன்றவை வழங்கப்படுவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு விவசாயிகள் முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.
விவசாயிகளின் பிற துறை தேவைகளும் கேட்டுணர்ந்து கிராம மேலாண்மை குழு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது. பெரிய கோட்டை வேளாண் உதவி அலுவலர் தினேஷ் விவசாயிகளுக்கு தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் மூலம் கைத்தெளிப்பான் மானியத்தில் வழங்கப்படுவது குறித்து எடுத்துரைத்தார்.
அட்மா திட்ட அலுவலர்கள் ஐயா மணி மற்றும் ராஜு உழவர் தொடர்பு திட்ட போர்டலில் விவசாயிகளின் விபரங்களை பதிவு செய்து விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்கள் வழங்கப்படுவது குறித்து எடுத்துரைத்தனர்.
சிசிதிட்ட அலுவலர்கள் கீர்த்தி வாசன் மற்றும் இளமாறன் சம்பாநெல்பயிர் காப்பீடு 15-11-23 க்குள் செய்வது பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர். உதவி விதை அலுவலர்கள் இளங்கோ மற்றும் பூபேஷ் தாளடிக்கேற்ற நெல் ரகங்கள் மற்றும் அவற்றுக்கான மானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினர்.
முடிவில் 250 விவசாயிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா மற்றும் முன்னோடி விவசாயி பழனிவேல் மற்றும் வேளாண் உதவி இயக்குனர் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் உதவி விதை அலுவலர்கள் மூலம் தலா 2 தென்னங்கன்றுகள் ரூ120 மானியத்தில் வழங்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் உழவர் கடன் அட்டை திட்டத்தை பயன்படுத்தி சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள் இதுவரை எந்த கடனும் வாங்கி இருக்காது பட்சத்தில் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கின் மூலம் பிணையாளர் இல்லாமல் ரூபாய் ஒரு லட்சம் வரையிலும் மற்றும் பிணையாளர் பரிந்துரையுடன் மூன்று லட்சம் வரையிலும் ஒரு வருட காலத்திற்கான கடன் தொகையினை சாகுபடிக்காகவோ ஆடு, மாடு, கோழி வளர்த்தல், மீன் வளர்த்தல் போன்றவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விவரங்களை தெரிவித்து தேவைப்பட்ட விவசாயிகளுக்கு அதற்கான படிவங்களையும் வழங்கினார்.
பெரிய கோட்டை வேளாண் உதவி அலுவலர் தினேஷ் கூட்டத்திற்க்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். உதவி விதை அலுவலர் இளங்கோ கிராம மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu