தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே வாலிபர் தற்கொலை

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே வாலிபர் தற்கொலை
X
திருவிடைமருதூர் அருகே, திருப்பனந்தாள் சின்ன கட்டாநகரம் பகுதியில், வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பனந்தாள் சின்ன கட்டாநகரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் விஜய் (25). இவர் தனது தாய் ஊரான காரைக்காலில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து விட்டு வேலை ஏதும் செய்யாமல் இருந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காரைக்காலில் இருந்து திருப்பனந்தாள் வந்துள்ளார்.

கடந்த 12ஆம் தேதி, சின்ன கட்டாநகரம் நாரை வாய்க்கால் அருகே மதுவுடன் சேர்த்து வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துள்ளார்.

காலையில் அவ்வழியே சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் திருப்பனந்தாள் காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் காவல்துறையினர் சென்று விஜயின் உடலை கைப்பற்றி திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!