வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிய வாலிபர் எலி பேஸ்ட் தின்று தற்கொலை

வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிய வாலிபர் எலி பேஸ்ட் தின்று தற்கொலை
X

விமல்ராஜ்

திருவிடைமருதூர் மணல்மேடு அருகே வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிய வாலிபர் எலி பேஸ்ட் தின்று தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் மணல்மேடு மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் விமல்ராஜ் (23). வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்தார். இதனை பெற்றோர் திட்டியதால் கோபித்துக்கொண்டு கடந்த 14ஆம் தேதி தனது வீட்டில் எலி பேஸ்ட் சாப்பிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags

Next Story
ai automation in agriculture