கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அம்மிக்கல்லை போட்டு கணவனை கொலை செய்த மனைவி

கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அம்மிக்கல்லை போட்டு கணவனை கொலை செய்த மனைவி
X
ஜெயபால்.
திருவிடைமருதூர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவனின் தலையில் மனைவி அம்மிக்கல் போட்டு கொலை செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (42). இவரது மனைவி அனிதா (35). கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனிதா தனது தந்தை ஊரான நெய்வாசலில் வந்து தங்கியுள்ளார்.

கடந்த 23ஆம் தேதி சென்னையில் பணியாற்றி வந்த இளையராஜா தனது குடும்பத்தினரை பார்க்க நெய்வாசல் வந்துள்ளார். இந்நிலையில் அனிதா வீட்டின் பின்புறம் உள்ள வாய்க்கால் பகுதியில் உடலில் பலத்த காயத்துடன் இளையராஜா இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருவிடைமருதூர் டி.எஸ்.பி. வெற்றிவேந்தன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் அனிதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் அனிதாவிற்கும் கணவர் ஊரான குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் ஜெயபால் (28) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இளையராஜா மனைவியை பிரிந்து சென்னையில் இருந்த நிலையில் அனிதா ஜெயபால் இடையே கள்ள உறவு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இளையராஜா மனைவியை பார்க்க வந்த நிலையில் தங்களுக்கு இடையூறு ஏற்படும் என கருதி அனிதாவும், ஜெயபாலும் இணைந்து அம்மிக்கல் கொண்டு இளையராஜாவை கொலை செய்து வீட்டின் பின்புறம் வாய்க்கால் பகுதியில் இழுத்துச் சென்று போட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அனிதாவை கைது செய்த போலீசார், தலைமறைவான ஜெயபாலை தேடிவந்தனர். இந்நிலையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் காமராஜ் தலைமையிலான காவலர்கள் தலைமறைவாக இருந்த ஜெயபாலை கடலூர் மாவட்டம் குச்சிபாளையம் அடுத்த எய்யலூர் கிராமத்தில் கைது செய்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!