திருப்பனந்தாளில் ஆடுதுறை ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி அளிப்பு

திருப்பனந்தாளில் ஆடுதுறை ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி அளிப்பு
X

திருப்பனந்தாள் ஒன்றியம், கோட்டூர் ஊராட்சியும், ஆடுதுறை ரோட்டரி சங்கமும் இணைந்து இரண்டாம் ஆண்டாக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசளிக்கப்பட்டது.

திருப்பனந்தாளில் ஆடுதுறை ரோட்டரி சங்கம் சார்பில் மக்களுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

திருப்பனந்தாள் ஒன்றியம், கோட்டூர் ஊராட்சியும், ஆடுதுறை ரோட்டரி சங்கமும் இணைந்து இரண்டாம் ஆண்டாக பொதுமக்களுக்கு வெல்லம் ஒரு கிலோ, பச்சரிசி ஒரு கிலோ, தேங்காய், வாழைப்பழம் சீப், 2 கரும்பு, சில்வர் தாம்பூலம் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மயிலாடுதுறை முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், ரோட்டரி கவர்னர் பாலாஜி, ஆடுதுறை ரோட்டரி சங்க தலைவர் மோகனசுந்தரம், செயலாளர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் உமா சிங்காரவேலு மற்றும் சண்முகம் செட்டியார், ஹஜ் முஹம்மது, கோவிந்தராஜ், சிவா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story
மனிதன் கனவு கண்ட காலத்தை இயந்திரம் உருவாக்கும் காட்சி – AIன் காலச்சுவடு!