திருவிடைமருதூரில் வி.சி.கட்சியினர் தி.மு.க.வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருவிடைமருதூரில் தி.மு.க.விற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கல்யாணபுரம் கடைவீதியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வேப்பத்தூர் பேரூராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட துணைத் தலைவர் பதவியை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி மாநில பொருளாளர் வெண்மணி பேசும்போது
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட துணைத் தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைக்கு ஒதுக்கவேண்டும் என்று தி.மு.க. தலைமை அறிவித்திருந்தது. ஆனால் அதையும் மீறி தி.மு.க.வில் உள்ள மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தானாகவே வேட்பாளரை போட்டு, போட்டி வேட்பாளரை வெற்றிபெற செய்திருக்கிறார். அதை தாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தி.மு.க. தலைமையையும் வன்மையாக கண்டிக்க வேண்டும் என்றார்.
மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும் வி.சி.க-விற்கு ஒதுக்கப்பட்ட வேப்பத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை வழங்காவிடில் மிகப்பெரிய அளவில் திருவிடைமருதூர் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu