திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூரில் பயிற்சி காவலர் தூக்கிட்டு தற்கொலை

திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூரில் பயிற்சி காவலர் தூக்கிட்டு தற்கொலை
X

பரத்குமார்.

திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூரில் பயிற்சி காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் செட்டிகுளத்தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் பரத்குமார் (22). இவர் நடந்து முடிந்த காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மார்ச் 13ம் தேதி முதல் தொடங்கிய திருச்சி காவலர் பயிற்சியில் ஒரு மாத காலமாக பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ப்புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை பயிற்சி காவலர் சரத்குமார் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது வாடகை பாத்திர குடோனில் மர்மமான முறையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் பந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் (பொறுப்பு) வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணத்தை விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி