தொடுவானம் வாசிப்பு முகாம்- இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு புத்தகங்கள் வழங்கல்
தொடுவானம் வாசிப்பு முகாம் மற்றும் இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கும் விழா எஸ். புதூர் சுகம் மருத்துவமனை வளாகத்தில் சுஜாதா ராஜா தலைமையில் நடைபபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவர் சாமவள்ளி வாழ்த்துரை வழங்கினார். பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க மண்டல ஒருங்கிணைப்பாளர் மோசஸ் வாசிப்பு முகாமைத் தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், கண்ணதாசன், சீராளன், விஸ்வநாதன், ராஜா, மணிகண்டன், அமர்நாத், சிவராஜ் ஆகியோர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி எடுத்தனர். வட்டாரக் கல்வி அலுவலர் பேபி, மேற்பார்வையாளர் பாக்யராஜ் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர் .
தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் வழிகாட்டுதலின்படி கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட நான்கு ஒன்றியங்களைச் சார்ந்த 100 தன்னார்வலர்களுக்கு மாவட்டத் திட்ட அலுவலர் ரமேஷ்குமார் புத்தகங்கள் வழங்கிப் பாராட்டினார். சுகம் மருத்துவமனை மருத்துவர் ராஜா சிறப்புரை நிகழ்த்தினார். விழா ஏற்பாடுகளை பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்க மண்டல ஒருங்கிணைப்பாளர் இதயராஜா மற்றும் ஆடுதுறை ஸ்ரீ கேஜிஎஸ் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சிறப்புடன் செய்திருந்தனர். விழா சிறக்க பணியாற்றிய சுகம் மருத்துவமனை செவிலியர்கள் பாராட்டப் பெற்றனர். விழா நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க கௌரவத் தலைவர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். கிஷோர் குமார் வரவேற்றார். பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன், கலைமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோழராஜன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu