திருபுவனம் ஸ்ரீகம்பஹரேஸ்வரர் கோவில் திருக்கல்யாண விழா

திருபுவனம் ஸ்ரீகம்பஹரேஸ்வரர் கோவில் திருக்கல்யாண விழா
X

திருபுவனம் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருபுவனம் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருபுவனத்தில் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் உருத்திரபாதத் திருநாள் விழா கடந்த 8ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

9ஆம் தேதி பெரிய கொடியேற்றமும், அதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வருகிறது. 13ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சகோபுர தரிசனமும், 14ஆம் தேதி காமதேனு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

இன்று காலையில் பல்லக்கும் இரவு 8 மணிக்கு மேல் திரயோதசி திதி ஆயில்யம் நட்சத்திரம் கூடிய துலா லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வெள்ளி மஞ்சத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!