திருமாந்துறை அட்சயநாதசுவாமி வைகாசி விசாக திருக்கல்யாண வைபவம்

திருமாந்துறை அட்சயநாதசுவாமி வைகாசி விசாக திருக்கல்யாண வைபவம்
X

. யோக நாயகி உடனாய அட்சயநாதர் சுவாமி வைகாசி விசாக திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 

Vaikasi Visakha Tirukkalyana Ceremony

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருமாந்துறை பிரசித்தி பெற்ற யோக நாயகி சமேத அட்சய நாத சுவாமி திருக்கோயில் உள்ளது. கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, யோக நாயகி உடனாய அட்சயநாதர் சுவாமி வைகாசி விசாக திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக கிராம மக்கள் திரளானோர் ஆலயத்திற்கு சீர்வரிசை எடுத்துவர மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி அம்பாள் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் சிறப்பு ஹோமம் நடைபெற்று மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு மகா தீபாராதனையும் ஆராதனைகளும் நடைபெற்றது.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்