திருவிடைமருதூரில் பூட்டியிருந்த வெள்ளி நகைகடையில் பொருட்கள் திருட்டு

திருவிடைமருதூரில் பூட்டியிருந்த வெள்ளி நகைகடையில்  பொருட்கள் திருட்டு
X

திருவிடைமருதூரில் பூட்டியிருந்த வெள்ளி நகைகடையில் வெள்ளி பொருட்கள் திருட்டு

கடையின் பின்புறம் உள்ள சுவற்றில் ஓட்டை போடப்பட்டு வெள்ளி நகைகள் திருடப்பட்டுள்ளது

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வடக்கு வீதியில் வசித்து வருபவர் பிலால் அகமது திவான் மகன் ஃபைசல் அகமது (39). இவர் தனது வீட்டிற்கு எதிரே மதினா ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடையில் வெள்ளி பொருட்கள் மட்டும் விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் நகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பின்புறம் உள்ள சுவற்றில் ஓட்டை போடப்பட்டு நகைகள் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காணொளியில், நள்ளிரவில் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!