வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ஸ்டாலினை கொலை செய்ய திட்டம் பா.ம.க. மாநில துணை செயலாளர் கைது

வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ஸ்டாலினை கொலை செய்ய திட்டம்    பா.ம.க. மாநில துணை செயலாளர் கைது
X

வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் நாகா ஸ்டாலினை கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் பா.ம.க. மாநில துணை செயலாளர் வெங்கட்ராமன் கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம் அருேக வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் நாகா ஸ்டாலினை கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் பா.ம.க. மாநில துணை செயலாளர் வெங்கட்ராமன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருேக வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் நாகா ஸ்டாலினை கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் பா.ம.க. மாநில துணை செயலாளர் வெங்கட்ராமன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம் அடுத்த ஆடுதுறை மருத்துவகுடியைச் சேர்ந்தவர் நாகா ஸ்டாலின் இவர் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவராக பதவியில் உள்ளார். ஸ்டாலினை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் கொலை செய்வதற்காக, வந்தபோது, போலீசார் மர்ம கும்பலை பிடித்தனர்.

இந்த கொலைக்கு, தலைவனாக செயல்பட்ட பிரபல ரவுடி லாலி மணிகண்டனை போலீசார் 24ம் தேதி, திருவிடைமருதூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்து கஸ்டடி எடுத்து விசாரித்தனர். லாலி மணிகண்டன் போலீசாரிடம், நாகா ஸ்டாலினை, கொலை செய்வதற்கு, பா.ம.க. மாநில துணை செயலாளரும், கும்பகோணத்தை அடுத்த கொத்தங்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கட்ராமன்(42) என்பரும் உடந்தையாக இருந்ததாக கூறினார்.

இதனையடுத்து திருவிடைமருதூர் போலீசார், வெங்கட்ராமனை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!