கும்பகோணம் அருகே ஆவணியாபுரத்தில் புதிய வழித்தட பேருந்து தொடக்கம்

கும்பகோணம் அருகே ஆவணியாபுரத்தில் புதிய வழித்தட பேருந்து தொடக்கம்
X

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியம் ஆவணியாபுரத்தில் தடம் எண் பி-1 கொண்ட புதிய வழித்தட பேருந்தை அரசு கொறடா கோவி.செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

கும்பகோணம் அருகே ஆவணியாபுரத்தில் புதிய வழித்தட பேருந்தை அரசு கொறடா கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியம் ஆவணியாபுரத்தில் தடம் எண் பி-1 கொண்ட புதிய வழித்தட பேருந்தை அரசு கொறடா கோவி.செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேருந்து ஆவணியாபுரத்தில் காலையில் 6.55 மணிக்கும் மாலையில் 5.20 மணிக்கும் தொடங்கி ஆடுதுறை, திருவிடைமருதூர், திருபுவனம், அம்மாசத்திரம், கும்பகோணம் வழியாக சுவாமிமலை வரை செல்லும். அதுபோன்று, சுவாமிமலையிலிருந்து காலை 5.35 மணிக்கும், மாலையில் 5.05 மணிக்கும் தொடங்கி அதே வழியாக ஆவணியாபுரம் வந்தடையும். இதனைத்தொடர்ந்து பேருந்தை துவக்கி வைத்த அரசு கொறடா கோவி.செழியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் ஆடுதுறை பேருந்து நிலையம் வரை பேருந்தில் பயணம் செய்தனர்.

இதில், திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, துணைப்பெருந்தலைவர் கருணாநிதி, திருப்பனந்தாள் ஒன்றிய துணைப்பெருந்தலைவர் அண்ணாதுரை, கூகூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி, அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி, துணை மேலாளர் (வணிகம்) கணேசன், உதவி மேலாளர் (இயக்கம்-கூட்டாண்மை) நடராஜன், உதவி பொறியாளர் (வணிகம்) ராஜ்மோகன், கிளை மேலாளர் கார்த்திகேயன், ஒன்றிய குழு உறுப்பினர் நசீர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture