திருநாகேஸ்வரத்தில் செங்கல் சூளை தொழிலாளி வெட்டிக்கொலை

திருநாகேஸ்வரத்தில் செங்கல் சூளை தொழிலாளி வெட்டிக்கொலை
X

திருநாகேஸ்வரத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செங்கல் சூளை தொழிலாளி ராஜேந்திரன்.

தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் நிலம் வாங்கியதில் ஏற்பட்ட பிரச்னையில் செங்கல் சூளை தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் நிலம் வாங்கியதில் ஏற்பட்ட பிரச்னையில் செங்கல் சூளை தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருவிடைமருதூர் அடுத்த திருநாகேஸ்வரம், தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). இவர் செங்கல் சூளை தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இன்று காலை ராஜேந்திரன் மர்ம நபர்களால், சரமாரியாக வெட்டப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

இதுகுறித்து திருநீலகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர். மேலும், போலீசார் விசாரணையில், ராஜேந்திரன், கடந்த சில நாட்கள் முன்பு அதே பகுதியில் நிலத்தை வாங்கியுள்ளார். நிலத்தை தனது தாத்தாவிடமிருந்து ஏமாற்றி வாங்கி விட்டதாகக் கூறி பேரனுக்கும், ராஜேந்திரனுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊர் பஞ்சாயத்து கூடி பிரச்சினைக்குரிய இடத்தை பிரித்து தர வேண்டும் என கூறினர்.

இதற்கு ஒப்புக் கொண்டு வந்த ராஜேந்திரன், தன்னை குடிபோதையில் ஏமாற்றி எழுதி வாங்கி விட்டனர் என, நிலத்தை விற்பனை செய்பவர்களுக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த பிரச்சினை தொடர்பாக ராஜேந்திரனை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!