/* */

வெடிக்குமா? வெடிக்காதா? - யூ டியூப் பார்த்து நாட்டுக்குண்டு: 2 சிறுவர்கள் கைது

யூடிப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

வெடிக்குமா? வெடிக்காதா? - யூ டியூப் பார்த்து நாட்டுக்குண்டு: 2 சிறுவர்கள் கைது
X

நாட்டு வெடிகுண்டுகள் (மாதிரி படம்)

யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். தயாரித்து வெடித்த வெடிகுண்டு காட்சிகளை இணையத்தில் வெளியிட்டு சிக்கிக்கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட முத்துப்பிள்ளை மண்டபம் ஒத்தைத் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் ஹரிபாலாஜி. இவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு தஞ்சையில் உள்ள இளைஞர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.

அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குல்சந்த்குமார் என்ற இளைஞரோடு தொடர்பு ஏற்பட்டு நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது பற்றி தெரிந்து கொண்டுள்ளார். இதனையடுத்து யூடியுப்பை பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த சிறுவன் கடந்த 13ம் தேதி கும்பகோணம் அருகே சிவபுரம் செல்லும் சாலையில் வெடிக்கச் செய்துள்ளார்.

அதனை அவரது நண்பர் தமிழ்ச்செல்வன் ( 17) வீடியோ எடுத்து நேற்று இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து நாச்சியார்கோவில் காவல்நிலைய போலீசார் வெடி குண்டு தயாரித்த ஹரி பாலாஜி மற்றும் அதனை வீடியோ எடுத்த அவனது நண்பன் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 17 May 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...