திருவிடைமருதூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு
கும்பகோணம் பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கிடங்கின் பாதுகாப்பு குறித்துஅரசு கொறடா கோவி. செழியன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், தஞ்சை மாவட்ட முதுநிலை மண்டல மேலாளார் உமாமகேஸ்வரி, தஞ்சை மாவட்ட மண்டல மேலாளர் தரக்கட்டுப்பாடு வனிதாமணி ஆகியோர்
கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் நுகர்ப்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூர், சன்னாபுரம், கொத்தங்குடி, தண்டந்தோட்டம் ஆகிய இடங்களில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. இதில் சன்னாபுரத்தில் 4600 டன் நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து திடீரென கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழையால் ஒரு சில நெல் மூட்டைகள் நனைந்தன. பாதிக்கப்பட்ட நெல் மூட்டைகளை அரசு கொறடா கோவி. செழியன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், தஞ்சை மாவட்ட முதுநிலை மண்டல மேலாளார் உமாமகேஸ்வரி, தஞ்சை மாவட்ட மண்டல மேலாளர் தரக்கட்டுப்பாடு வனிதாமணி ஆகியோர் இரவு நேரத்தையும் பொருட்படுத்தாது ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் பேசியது: கும்பகோணம் பகுதிகளில் கன மழை பெய்து எதிர்பாரா விதமாக மழைநீரில் நனைந்து 60 மூட்டைகள் வரைதான் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டதாக பொய் செய்தி பரப்புவதாகவும், நேரில் பார்வையிட்டு அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu