பள்ளி மாணவர்களை, விருந்தினர்கள் போல் வாசலுக்கு வந்து வரவேற்க வேண்டும்

பள்ளி மாணவர்களை, விருந்தினர்கள் போல் வாசலுக்கு வந்து வரவேற்க வேண்டும்
X

அரசு கொறடா பைல் படம்

பள்ளி மாணவர்களை விருந்தினர்கள் போல் வாசலுக்கு வந்து, இனிப்புகள் வழங்கி, பூக்கள் கொடுத்து வரவேற்க வேண்டும் என அரசு தலைமை கொறடா தெரிவித்தார்.

அரசு தலைமை கொறடாவும் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினருமான கோவி.செழியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

கொரோனா பெருந்தொற்று காலம் முடிவுக்கு வந்து, மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில், ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு, நவம்பர் 1ஆம் தேதி திங்கட்கிழமை அன்று 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் அனைவரும் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தர இருக்கிறார்கள்.

எனவே தமிழக முதல்வர் முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க சட்டப்பேரவை உறுப்பினர்கள், மற்றும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரிய ஆகியோர் ஆகியோர் மாணவ மாணவியர்களுக்கு நம்பிக்கையும், உற்சாகமும் தரும் வகையில், விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பது போல், பள்ளிக்கு வருகை தரும் மாணவ மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, பூக்கள் கொடுத்து வரவேற்பு அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare