செல்போனில் கேம் விளையாடிய மகன்: தாய் கண்டித்ததால் ஆற்றில் விழுந்து பலி

செல்போனில் கேம் விளையாடிய மகன்: தாய் கண்டித்ததால் ஆற்றில் விழுந்து பலி
X

ஆற்றில் விழுந்து பலியான சிறுவன் பார்த்திபன்.

கும்பகோணத்தில் செல்போன் விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவிசைநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகன் மகன் பார்த்திபன் (16). பார்த்திபன் கும்பகோணத்தில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4 ந் தேதி காலை அவரது தாய் பார்த்திபனிடம், செல்போனில் தொடர்ந்து கேம் விளையாடி வருவதால், சரியாக படிப்பதில்லை என திட்டி, கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பார்த்திபன் 4ந் தேதி காலை வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், இன்று காலை வீட்டின் எதிர்புறம் உள்ள காவிரி ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!