பாமக நிர்வாகியை கொலை செய்ய திட்டம் - 4 பேர் கைது

பாமக நிர்வாகியை கொலை செய்ய திட்டம் - 4 பேர் கைது
X

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வீரசோழன் ஆற்று தென்கரை பகுதியில் திருவிடைமருதூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் கீழ மருத்துவகுடி பகுதியைச் சேர்ந்த வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம. க. ஸ்டாலின் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்வதற்காக சதித்திட்டம் தீட்டி நோட்டமிட வந்துள்ளதாக விசாரனையில் தெரியவந்தது.

போலீஸ் விசாரணையின் போது இருவர் தப்பி சென்று விட்டனர். திருவிடைமருதூரைச் சேர்ந்த மகேஷ், செந்தமிழ்செல்வன், மணிகண்டன், திருபுவனம் பாலமுருகன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். போலீஸாரின் தொடர் விசாரணையில் சேலம் மத்திய சிறையில் இருக்கும் லாலி மணிகண்டன் என்பவர் கள்ள தனமாக செல்போன் மூலம் அங்கிருந்தவாறே சதி திட்டம் தீட்டியது தெரியவந்ததால், லாலி மணிகண்டன் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம. க. ஸ்டாலின் மருத்துவக்குடி இல்லத்திற்கு முன்பு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 பேர் காவலர்கள் இரவு பகல் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai marketing future