மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பாக ரூ.1,100 மதிப்பிலான மளிகை பொருட்கள் மற்றும் போர்வை மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்த பள்ளியில் பயிலும் 300 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர் குடும்பங்களுக்கு தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பாக ரூ.1,100 மதிப்பிலான மளிகை பொருட்கள் மற்றும் போர்வை வழங்கும் நிகழ்ச்சி திருபுவனம் மற்றும் திருப்பனந்தாளில் நடந்தது. இவ்விழாவிற்கு தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் மகராஜ் தலைமை வகித்தார். ஜிதமானசாநந்தர் மகராஜ் ,கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவிடைமருதூர் தாசில்தார் சந்தனவேல், திருப்பனந்தாள் ஒன்றிய குழு துணை தலைவர் அண்ணாதுரை, வட்டார கல்வி அலுவலர்கள் இளங்கோவன், சிவகுருநாதன், தொழிலதிபர் சதீஷ் பான்ஸ்லே ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு தலைமை கொறடா கோவி செழியன், இரண்டாவது அலை சேவை குறித்த தொகுப்பு நூலை வெளியிட்டார். திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு மளிகை நிவாரணப் பொருட்கள் மற்றும் போர்வை உள்ளிட்டவைகளை வழங்கினார். தொடர்ந்து மன்னார்குடி ஜீயர் செண்டை அலங்கார செண்பக மன்னார் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
ஆசிரியர் பயிற்றுனர் ரிவோல்ட், சிறப்பு ஆசிரியர்கள் விஜயகுமார், சண்முகம், சமிதி பொறுப்பாளர்கள் இந்திரா, வேதம்முரளி, பாரதிமோகன், கிருபாகரன், பாலமுருகன், கார்த்தி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu