ஆடுதுறை பேரூராட்சியில் உறுப்பினர்கள் கடத்த வாய்ப்பு: போலீஸார் பாதுகாப்பு

ஆடுதுறை பேரூராட்சியில் உறுப்பினர்கள் கடத்த வாய்ப்பு: போலீஸார்  பாதுகாப்பு
X

ஆடுதுறை பேரூராட்சியில தலைவர் தேர்தலில் உறுப்பினர் கடத்தப்படலாம என்ற சந்தேகததின்பேரில் போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

ஆடுதுறை பேரூராட்சியில் உறுப்பினர்கள் கடத்தப்படலாம் என்பதால் போலீசார் பாதுகாப்பு

ஆடுதுறை பேரூராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக 4 வார்டிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 வார்டிலும், மதிமுக ஒரு வார்டு என ஏழு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் தலைமை பேரூராட்சி தலைவர் வேட்பாளராக மதிமுகவை சேர்ந்த 3-வது வார்டு உறுப்பினர் சரவணன் என்பவரை அறிவித்துள்ளது. இவர் பேரூராட்சி தலைவராக வேண்டும் எனில் 8 பேரின் ஆதரவு தேவை. எனவே இன்னொருவரின் ஆதரவை பெற வேண்டியுள்ளது.

அதேபோல் பாமகவில் 4 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் மக.ஸ்டாலின் பேரூராட்சி தலைவராக முயற்சி செய்து வருகிறார். அவருக்கு அதிமுகவில் இருவரும், சுயேச்சைகள் இருவரின் ஆதரவும் இருந்தால் பேரூராட்சி தலைவர் ஆகி விடலாம். இந்நிலையில் ஆடுதுறை பேரூராட்சி உறுப்பினர்களை கடத்தி செல்லப்படலாம் என போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து 15-வார்டு உறுப்பினர்களின் வீடுகள் முன்பாகவும், முக்கிய தெருக்களிலும் திருவிடைமருதூர் டிஎஸ்பி வெற்றிவேந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, ஓம்பிரகாஷ் ஆகியோர் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
மக்களின் உயர்தர மருத்துவ சேவைக்கான முன்முயற்சி - நாமக்கல் ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல்