திருவிடைமருதூர் தொகுதியில் பகுதி நேர நியாயவிலைக்கடை திறப்பு

திருவிடைமருதூர் தொகுதியில் பகுதி நேர நியாயவிலைக்கடை  திறப்பு
X

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதியில் புதிய பகுதி நேர அங்காடிகளை தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் திறந்து வைத்தனர்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ள அங்காடிகளை இரண்டாக பிரிக்கப்பட்டு பகுதி நேரக்கடைகளாக உருவாக்கப்பட்டன.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதியில் புதிய பகுதி நேர அங்காடிகளை தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.

தேப்பெருமாநல்லூர், சுண்ணாம்புக்காரத் தெரு, திருப்பணிப்பேட்டை, கதிராமங்கலம், குணதலைபாடி ஆகிய இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ள அங்காடிகளை இரண்டாக பிரிக்கப்பட்டு பகுதி நேரக்கடைகளாக உருவாக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, ஒன்றிய துணை பெருந்தலைவர் கருணாநிதி, பேரூர் செயலாளர் சுந்தரஜெயபால், திருப்பனந்தாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜா, நாகரசம் பேட்டை சரவணன், சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் அயூப்கான், மேலாண்மை இயக்குனர் மாரீஸ்வரன், பொது மேலாளர் கோபிநாத், தேப்பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் மற்றும் வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக தேப்பெருமாநல்லூர் ஊராட்சி சண்முகம் நகரில் புதிய மின்மாற்றி இயக்கி வைக்கப்பட்டது.

Tags

Next Story
ai robotics and the future of jobs