கும்பகோணம் முதல் எரவாஞ்சேரி வரை புதிய போக்குவரத்து துவக்க விழா

கும்பகோணம் முதல் எரவாஞ்சேரி வரை புதிய போக்குவரத்து துவக்க விழா
X
திருவிடைமருதூர் ஒன்றியம் எஸ்.புதூர் ஊராட்சியில், கும்பகோணம் முதல் எரவாஞ்சேரி வரை புதிய போக்குவரத்து துவக்க விழா நடைபெற்றது.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியம் எஸ்.புதூர் ஊராட்சி கடைவீதியில், கும்பகோணம் முதல், எரவாஞ்சேரி வரையிலான புதிய போக்குவரத்து சேவையை, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்தப் பேருந்து எஸ்.புதூர் ஊராட்சி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, கும்பகோணம் முதல், திருவிடைமருதூர், ஆடுதுறை, ஆவணியாபுரம், மஞ்சமல்லி, எஸ்.புதூர் மற்றும் வடமட்டம் வழியாக, எரவாஞ்சேரி வரை சென்று திரும்பும். பேருந்தினை துவக்கி வைத்து அரசு கொறடா கோவி.செழியன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கும்பகோணம் வரை பேருந்திலேயே பயணம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில், திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, துணை பெருந்தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் கூகூர் அம்பிகாபதி, அண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர்கள் ராஜா, சரவணன், எஸ்.புதூர் ஊராட்சி செயலர் சிவக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story