ஆடுதுறை பேரூராட்சி தலைவராக ம.க. ஸ்டாலின் (பா.ம.க) போட்டியின்றி தேர்வு

ஆடுதுறை பேரூராட்சி தலைவராக  ம.க. ஸ்டாலின் (பா.ம.க) போட்டியின்றி தேர்வு
X

தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ம.க. ஸ்டாலின்.

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தேர்தலில் பா.ம.க. வை சேர்ந்த ம.க. ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து தலைவர் பதவிக்கான தேர்தல், தேர்தல் நடத்தும் அலுவலர் ரங்கராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இத்தேர்தலில் ஆடுதுறை பேரூராட்சி கவுன்சிலர்கள் பா.ம.க.வை சேர்ந்த முத்துபீவிஷா, சாந்தி, பாலதண்டாயுதம், அ.தி.மு.க.வை சேர்ந்த கமலா, குமார் சுயேச்சைகள் செல்வராணி, பரமேஸ்வரி ஆகியோர் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஸ்டாலின் தலைமையில் அணிவகுத்து வந்தனர். தலைவர் பதவிக்கு பா.ம.க.வை சேர்ந்த ம.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மேலும் தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் யாரும் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. இதனால் வேட்புமனு தாக்கல் செய்த ம.க. ஸ்டாலின் ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே தேர்தல் நடத்தும் அலுவலர் ரங்கராஜன் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தலில் பா.ம.க.வை சேர்ந்த ம.க. ஸ்டாலின் வெற்றிபெற்றதாக அறிவித்தார்.

தேர்தலையொட்டி தஞ்சாவூர் ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் திருவிடைமருதூர் டி.எஸ்.பி .வெற்றிவேந்தன், கும்பகோணம் டி.எஸ்.பி. அசோகன், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. மனோகரன் ஆகியோர் தலைமையில் 11 ஆய்வாளர்கள் 14 உதவி ஆய்வாளர்கள் உட்பட 250 காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ம.க. ஸ்டாலினுக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சால்வை அணிவித்தும், வெடி வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!