கும்பகோணத்தில் எரி சாரயம் விற்பனை செய்தவர் கைது

கும்பகோணத்தில் எரி சாரயம்  விற்பனை செய்தவர் கைது
X
கும்பகோணம் அருகே வீட்டில் எரிசாராயம் பதுக்கி வைத்து விற்பனை.செய்த நபர் கைது செய்யப்பட்டார் அவரிடம் இருந்து 2,650 லிட்டர் சாராயம் ரூ.9.35 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றினர்‌.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் கூட்டுறவு நகர் விரிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாண்டிச்சேரி மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஸ்பிரிட் எனப்படும் எரிசாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதை அடுத்து திருநீலக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது அந்த வீட்டில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 81 கேன் எரிசாராயத்தையும், ரூ.9 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு காரை கைப்பற்றினர்.

மேலும் அந்த எரிசாராயத்தை அடைத்து விற்பனை செய்வதற்காக ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் கேன்களையும் கைப்பற்றினர். போலீசார் வருவதை அறிந்து அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் சாக்கியம் பள்ளியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் திருநீலக்குடி காவல் நிலையத்திற்கு சென்று கைப்பற்றப்பட்ட எரிசாராயம் மற்றும் ரொக்கப்பணத்தை பார்வையிட்டார்.

Tags

Next Story
ai marketing future