திருப்பனந்தாள் அருகே ஆரலூரில் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்
திருப்பனந்தாள் அருகே ஆரலூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதனை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் முன்னிலையில், அரசின் தலைமை கொறடா கோவி. செழியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில் தமிழக அளவில் இதுவரை இத்திட்டத்தின் வாயிலாக ஏழை, எளியோா் பயன்பெறும் வகையில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயன்பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
இம்முகாமில் சித்தா, மகப்பேறு, நரம்பியல், சிறுநீரகவியல், காது மூக்கு தொண்டை, பல் சிகிச்சை, தோல் வியாதிகள், சர்க்கரை வியாதி, எலும்பு முறிவு, உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம், இரத்த பரிசோதனை, பிசியோதெரப்பி சிகிச்சை, இ.சி.ஜி, பொது மருத்துவம் உள்ளிட்ட அனைத்து விதமாக நோய்களுக்கும் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையுடன் அதற்கான மருத்து மாத்திரைகளும் தேவையானவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவி ரவிச்சந்திரன், ஒன்றிய துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இளவரசி இன்பத்தமிழன், ஆரலூர் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu