திருப்பனந்தாள் அருகே மளிகை கடையில் தீ விபத்து

திருப்பனந்தாள் அருகே மளிகை கடையில் தீ விபத்து
X
தீயில் எரிந்து சாம்பலான மளிகைக்கடை. 
திருப்பனந்தாள் அருகே மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே கட்டா நகரம் பெரிய தெருவை சேர்ந்த மருதையன் மகன் பழனி (42). இவர் முட்டக்குடி பேருந்து நிலையம் எதிரில், இரண்டு வருடங்களாக பழனி மளிகை என்ற கடையை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென கடை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் கடையில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், மளிகை பொருட்கள் மற்றும் புடவைகள் என அனைத்தும் எரிந்து விட்டது. மேலும் அடுத்த கடைக்கு தீ பரவியுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!