திருவிடைமருதூர் அடுத்த தத்துவாஞ்சேரியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான வைக்கோல் போர் செட் தீயில் கருகி சேதம்

திருவிடைமருதூர் அடுத்த தத்துவாஞ்சேரியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான  வைக்கோல் போர் செட் தீயில் கருகி சேதம்
X

தீயை அணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.

திருவிடைமருதூர் அடுத்த தத்துவாஞ்சேரியில் ரூ.15 லட்சம் மதிப்பில வைக்கோல் போர் செட் தீயில் கருகி சேதம்

திருவிடைமருதூர் அடுத்த தத்துவாஞ்சேரியில் ரூ.15 லட்சம் மதிப்பில வைக்கோல் போர் செட் தீயில் கருகி சேதம்.

திருவிடைமருதூர் அடுத்த தத்துவாஞ்சேரி சாய் பாரதி என்பவர் சாய் சத்யா பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகின்றார். அவரது அமைப்பில் ஒரு ஷெட்டில் 25 பசுமாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் டயரில் தீவைத்து மாடுகள் இருந்த ஷெட்டுக்குள் வீசியுள்ளன்னர். இதில் தீ மளமளவென மாடுகளுக்கு வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர் மற்றும் செட்டுக்குள் இருந்த பல பொருட்கள் தீயில் கருகின.

இதில் அதிர்ஷ்டவசமாக மாடுகளை வேறிடத்தில் மாற்றி கட்டியிருந்ததால் 25 மாடுகள் உயிர் தப்பின. இதுகுறித்து தகவல் அறிந்த அமைப்பின் உரிமையாளர் சாய் பாரதி, திருவிடைமருதூர் தீயணைப்பு நிலையத்திற்கும் திருப்பனந்தாள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.

புகாரின் பேரில் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் தீப்பற்றியது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!