பைனான்சியரின் மனைவி, மாமியார் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை

பைனான்சியரின் மனைவி, மாமியார் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை
X

பைல் படம்.

திருவிடைமருதூர் அருகே பைனான்சியரின் மனைவி, மாமியார் இருவரும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அன்பழகன் (50). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 30 வருடங்களாக இங்கு வசித்து வருகிறார். இவரது மனைவி ராணி (38). இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பாளப்பட்டி கிராமம். இவர்களுக்கு லோகேஷ் என்ற தனியார் கல்லூரியில் படிக்கும் மகனும், யோகிதா என்ற 10ம் படிக்கும் மகளும் உள்ளனர்.

இவர்களது வீட்டில் ராணியின் தாயார் மீனாட்சி (65) கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருந்து வந்துள்ளார். இதனால் அன்பழகன் தனது மனைவியிடம் உனது தாயை ஊருக்கு அனுப்பி வை என்று வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனமுடைந்த தாய், மகள் இருவரும் இரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து வந்த திருவிடைமருதூர் போலீசார் பிரேதங்களை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் தாய் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!