பூச்சிக் கொல்லிமருந்துகளின் தரத்தை உறுதிபடுத்த ஆய்வகம்: வேளாண்துறை தகவல்
பூச்சிக்கொல்லி ஆய்வகம்(பைல் படம்)
தஞ்சாவூர் மாவட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தரத்தை உறுதிபடுத்தும் பூச்சிக்கொல்லி ஆய்வு குறித்து விவசாயிகளுக்கு வேளாண்துறை விளக்கமளித்துள்ளது
தஞ்சாவூர் மாவட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தரத்ததை ஆய்வு மேற்கொள்வது குறித்து திருவிடைமருதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பு.கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண்மை சாகுபடியில் பயன்படுத்தப்படும் இடுபொருட்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் முக்கிய பங்குவகிக்கிறது.
பூச்சிக்கொல்லி மருந்துகள் விவசாயிகளுக்கு பூச்சி மற்றும் நோயினால் ஏற்படும் பொருளாதார இழப்பை குறைக்க பயன்படுகிறது. ஆகையால் அவைகள் தரமானதாகவும் நிர்ணயிக்கப்பட்ட அளவிலும் இருக்க வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகளின் தர குறைபாட்டினால் ஏற்படும் இழப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க தேவையான தரக்கட்டுப்பாடு வழிமுறைகளை உருவாக்கி செயல்படுத்துவது அத்தியாவசிய பணியாக கருதப்பட்டு பூச்சிக்கொல்லி மருந்துகளின் உற்பத்தி விற்பனை மற்றும் அவைகளின் தரத்தினை உறுதிப்படுத்தும் விதமாக பூச்சிக்கொல்லி சட்டம் 1968 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருவிடைமருதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கட்டுபாட்டில் செயல்பட்டு வரும் பூச்சிக்கொல்லி ஆய்வகத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கின் அடிப்படையில் வட்டார அளவிலான பூச்சிக்கொல்லி ஆய்வாளர்கள் விற்பனை கடைகளில் மாதிரிகளை சேகரிக்கின்றனர். பூச்சிக்கொல்லி ஆய்வாளர்கள் சேகரித்த பூச்சிக்கொல்லி மாதிரிகளை மாநில பூச்சிக்கொல்லி ஆய்வக குறியீட்டு மையத்திற்கு அனுப்பப்படுகிறது,
குறியீட்டு மையத்தில் பெறப்படும் பூச்சுக்கொல்லிகளுக்கு குறியீடு வழங்கப்பட்டு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூச்சிக்கொல்லி பரிசோதனை நிலையத்திற்கு தர ஆய்வுக்காக பெறப்படுகிறது. மாதிரிகள் கிடைத்தவுடன், தர நிலைகளை உறுதிப்படுத்துவதுற்காக வேதியியல் ஆய்வுகள் இந்திய தர நிர்ணய விவரக்குறிப்பின் படி பரிசோதனை செய்யப்படுகின்றன.
இவ்வாய்வகத்தில் பூச்சிக்கொல்லி மருந்து மாதிரிகள் கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள் தரம் மற்றும் தரமற்ற மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் உரிய படிவத்தில் பூச்சிக்கொல்லி ஆய்வாளர்களுக்கு தொடர் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. சட்டரீதியாக நடவடிக்கை ஆய்வின் முடிவில் தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்து ஆய்வாளர்கள் பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது துறை மற்றும் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எனவே ஆய்வகங்களில் தரத்தை ஆய்வு செய்தும் விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு செய்தும் தரமான பூச்சிக்கொல்லிகள் விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனால் விவசாயிகளுக்கு தரமான பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu