தேர்தல் புறக்கணிப்பு பேனர் கிழிப்பு : வி.ஏ .ஓ சிறைபிடிப்பு

தேர்தல் புறக்கணிப்பு பேனர் கிழிப்பு :   வி.ஏ .ஓ சிறைபிடிப்பு
X
தேர்தல் புறக்கணிப்பு பேனரை கிழித்த வி.ஏ.ஓவை மக்கள் சிறை பிடித்தனர்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் கிராம மக்கள்தேர்தலை புறக்கணிப்பதாக வைத்த பேனரை கிழித்த கிராம நிர்வாக அலுவலரை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நடுவக்கரை மாங்குடி கிராமம் புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் 70 குடும்பத்தினர், சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி அப்பகுதியில் பேனர் வைத்திருந்தனர்.

கடந்த 25 ஆண்டுகளாக இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு போராடி வரும் அந்த கிராமத்தினருக்கு இதுவரை பட்டா வழங்கப்படாததால் இந்த தேர்தலை புறக்கணிப்பு செய்யப் போவதாக கூறி பேனர் வைத்து வாக்கு கேட்டு வரும் அரசியல் கட்சியினருக்கு தெரியப்படுத்தினர்.

இந்நிலையில் இன்று காலை அந்த கிராமத்திற்கு சென்ற அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் பொது மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக வைத்திருந்த பிளக்ஸ் பேனரை கிழித்தார். இதனை கண்ட அந்த கிராமத்தினர் பிளக்ஸ் பேனரை கிழித்த கிராம நிர்வாக அலுவலரை சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர் கிழித்து தனது மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற பிளக்ஸ் பேனரை கிராம மக்கள் பிடுங்கி வைத்துக் கொண்டனர்.

பின்னர் பொதுமக்கள் எதிர்ப்பால் அந்த கிராம நிர்வாக அலுவலர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!