ஆடுதுறையில் சாலைகளில் நாய்கள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் பீதி

ஆடுதுறையில் சாலைகளில் நாய்கள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் பீதி
X

கோப்பு படம் 

ஆடுதுறையில், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள நாய்களை பிடித்துச் செல்ல வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்காவில் ஆடுதுறை பகுதி உள்ளது. இந்த பகுதியின் வழியாக தினமும் ஏராளமானோர், பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் ஆடுதுறை பகுதியில் நாய்கள் அதிக அளவில் சாலைகளில் சுற்றி திரிகின்றன.

மேலும் சாலையின் குறுக்கே நாய்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி கடித்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆடுதுறை பகுதியில் சுற்றிதிரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்