திருவிடைமருதூர் பேரூராட்சி 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்

திருவிடைமருதூர் பேரூராட்சி 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
X

பைல் படம்.

திருவிடைமருதூர் பேரூராட்சி 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

திருவிடைமருதூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியலை திருவிடைமருதூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கண்ணு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிவகணேசன், பொன் பசவகுமார் ஆகியோர் வெளியிட்டு உள்ளனர். திருவிடைமருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு:

1-வது வார்டு

ஆரோக்கியதாஸ் (தி.மு.க.) சிவகுமார் (அ.ம.மு.க.), ரவி (பா.ம.க.), கார்த்திக் (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சை ஒருவர் என 5 பேர் போட்டியிடுகின்றனர்.

2-வது வார்டு

பானுப்பிரியா (ம.தி.மு.க.) அமுதா (அ.தி.மு.க.) சண்முகி (அ.ம.மு.க.) ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.

3-வது வார்டு

சரவணன் (தி.மு.க.) வெங்கடேசன் (அ.தி.மு.க.) கண்மணி (பி.ஜே.பி.) மாரியப்பன் (அ.ம.மு.க.) மற்றும் சுயேட்சை ஒருவர் உட்பட 5 பேர் போட்டியிடுகின்றனர்.

4-வது வார்டு

ராதா (தி.மு.க.), கலைச்செல்வி (அ.தி.மு.க.), விமலா (பா.ம.க.), மற்றும் சுயேட்சை ஒருவர் உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.

5-வது வார்டு

பத்மா (தி.மு.க.) பிரேமா (அ.தி.மு.க.) மோகனசுந்தரி (பி.ஜே.பி), ராணி (அ.ம.மு.க.) மற்றும் சுயேட்சை 2 பேர் உட்பட 6 பேர் போட்டியிடுகின்றனர்.

6-வது வார்டு

புனிதா (தி.மு.க.), அம்பிகா (அ.தி.மு.க.) ஆகிய 2 பேர் போட்டியிடுகின்றனர்.

7-வது வார்டு

பிரபாவதி (தி.மு.க.), ராஜேஸ்வரி (சுயே.), ஆகிய 2 பேர் போட்டியிடுகின்றனர்.

8-வது வார்டு

சுந்தர ஜெயபால் (தி.மு.க.), மருதவாணன் (பி.ஜே.பி.) ஆகிய 2 பேர் போட்டியிடுகின்றனர்.

9-வது வார்டு

கலியமூர்த்தி (தி.மு.க.), சீனிவாசன் (அ.தி.மு.க.), சமீர் ஹாசிம் (அ.ம.மு.க.) கமலா (பா.ம.க) ராஜு படையாட்சியார் (பி.ஜே.பி.) ஆகிய 5 பேர் போட்டியிடுகின்றனர்.

10-வது வார்டு

கனிமொழி (தி.மு.க.), இலக்கியா (அ.தி.மு.க.), பிரேமா (அ.ம.மு.க.) மற்றும் சுயேட்சை ஒருவர் உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.

11-வது வார்டு

இரகுபதி (தி.மு.க.), விஜய் மோகன்(அ.தி.மு.க.), ராஜீ படையாட்சியார் (பி.ஜே.பி.), சாதிக் பாட்சா(அ.ம.மு.க.), ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.

12-வது வார்டு

சுதாகர் (காங்.) நாகராஜன் (அ.தி.மு.க.), ராஜேந்திரன் (அ.ம.மு.க.), மற்றும் சுயேட்சை 2 பேர் உட்பட 5 பேர் போட்டியிடுகின்றனர்.

13-வது வார்டு

சங்கர்(அ.தி.மு.க.), ரமேஷ் (பா.ம.க.) மற்றும் சுயேட்சை 4 பேர் உட்பட 6 பேர் போட்டியிடுகின்றனர்.

14-வது வார்டு

அபிநயாஸ்ரீ (ம.தி.மு.க.), பிரியா (அ.தி.மு.க.), ஆகிய 2 பேர் போட்டியிடுகின்றனர்.

15-வது வார்டு

சாந்தி (தி.மு.க.), சசிகலா (அ.தி.மு.க.), விஜயா (பா.ம.க.) ஷஹபான் பேகம் (தே.மு.தி.க.) மற்றும் சுயேட்சை ஒருவர் உட்பட 5 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 15 வார்டுகளிலும் 60 பேர் போட்டியிடுகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்