உயிருக்கு ஆபத்து: ஸ்டாலின் கதறல்; பாமக அதிர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், தி.மு.க., 4, தி.மு.க., கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2, ம.தி.மு.க., ஒன்று என 7 வார்டுகளிலும், பா.ம.க., 4, அ.தி.மு.க., சுயேட்சைகள் தலா 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தன. பெரும்பான்மைக்கு 8 கவுன்சிலர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், தி.மு.க.,வுக்கும் - பா.ம.க.,வுக்கும் இடையே தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில், ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் பதவிக்காக, 3வது வார்டில் ம.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பா.ம.க., சார்பில் 12வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஸ்டாலின், தலைவராக முயற்சி செய்தார்.
கடந்த 4ம் தேதி மறைமுக தேர்தலுக்கு, 15 பேரில் தி.மு.க., கவுன்சிலர்கள் மூன்று பேரை தவிர 12 மட்டுமே வந்திருந்தனர். வராத கவுன்சிலர்களை மாற்றுக் கட்சியினர் கடத்தி விட்டதாக கூறி, வேட்பாளரான சரவணன், மறைந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மகன் இளங்கோவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் கண்ணன், ஹமீம்நிசா ஆகியோர் பேரூராட்சி அலுவலகத்தில் ரகளை செய்தனர். இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், ஆவணங்களை கிழித்த ரகளை செய்யதாகவும், தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசன் கொடுத்த புகாரின் பேரில், திருவிடைமருதுார் போலீசார், கவுன்சிலர்கள் ம.தி.மு.க., கவுன்சிலர் சரவணன், தி.மு.க., கவுன்சிலர் இளங்கோவன், இந்திய
யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்கள் ஷமிம்நிஷா, கண்ணன் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு செய்தனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் மக.ஸ்டாலின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நேற்று மாலை ம.க.ஸ்டாலின் இணையத்தில் தனது உயிருக்கும் தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக பகிரங்கமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu