பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கியதில் மோசடி: சிபிஐ விசாரிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கியதில் மோசடி:  சிபிஐ  விசாரிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

திருவிடைமருதூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 

திருவிடைமருதூரில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கியதில் முறைகேடுகளை விசாரிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவிடைமருதூரில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கியதில் நடந்த மோசடி முறைகேடுகளை சிபிஐ கொண்டு விசாரிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவிடைமருதூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகி வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுவாமிமலை சுவாமிநாதன் கண்டன முழக்கம் எழுப்பினர். அப்போது விவசாயிகள் கையில் பருத்தி செடியுடன், பிரதமர் உருவப் படத்துடன் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம் 2016-2020 ஆண்டு இழப்பீடு வழங்கியதில் உள்ள மோசடி முறைகேடுகளை சிபிஐ கொண்டு விசாரிக்க வேண்டும். நடப்பு ரபி பருவ இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும், தமிழக வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறைகளில் முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!