மகாலிங்க சுவாமி கோவில் உடைந்த சிலையை பார்வையிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை
திருவிடைமருதூரில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில், மேற்கு கோபுரத்தின் கீழ் மண்டபத்தில் குகைக் கோயிலில் பத்திரகிரியார் உருவச்சிலை சுமார் நான்கரை அடி உயரத்தில் கருங்கல்லால் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை மர்ம நபர்கள் கீழே தள்ளி உடைத்துள்ளனர். இதுகுறித்து கோவில் கண்காணிப்பாளர் கண்ணன் திருவிடைமருதூர் போலீசில் புகார் செய்துள்ளார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிலை சேதப்படுத்தப்பட்டதை நேரில் பார்வையிட்டு கோயில் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் பணியாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலில் ஆயிரம் தெய்வீக பசுக்கள் உள்ள கோசாலையில் வலம் வந்து வழிபாடு செய்து பசுக்களுக்கு உணவு வழங்கினார். தொடர்ந்து மூலவர் ருக்மணி தாயார் சமேத பாண்டுரங்கன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருக்கு கோயில் ஸ்தாபகர் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் பொன்னாடை அணிவித்து, சுவாமி படங்கள் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu