தருமபுரம் ஆதீனம் தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை

தருமபுரம் ஆதீனம் தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை
X

திருப்பனந்தாள் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தொடக்கப்பள்ளியில் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது.

திருப்பனந்தாளில் தருமபுரம் ஆதீன அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா முள்ளுகுடி ஊராட்சியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷின் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியானது 1957ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்விபயின்று வருகின்றனர். பள்ளி கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் தருவாயில் மிகவும் மோசமாக உள்ளதால் கிராமங்களில் உள்ள மாணவ மாணவிகள் வெகுதூரம் சென்று மற்ற பள்ளிகளில் கல்வி பயிலும் சூழல் ஏற்பட்ட நிலையில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மழலையர் மற்றும் தொடக்க பள்ளிக்கான 5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டுவதற்காக ஏற்பாடு செய்திருந்தார். அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. தருமபுர ஆதீன தம்பிரான் சுவாமிகள் ஸ்ரீமத் சுப்பிரமணிய சுவாமிகள் முன்னிலையில் பள்ளியில் பயின்ற முன்னாள் மற்றும் இந்நாள் பள்ளி மாணவர்கள் இணைந்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை துவக்கி வைத்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!