திருமாந்துறை அட்சயநாத சுவாமி கோயிலில் அட்சய திருதியை பெருவிழா
திருவிடை மருதூர் அட்சயநாதர் கோவில் கொடிக்கம்பம் குடமுழுக்கு நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள திருமாந்துறை அக்ஷ்யநாத சுவாமி கோயிலில் இன்று அட்சய திருதியை பெருவிழா கொண்டாடப்பட்டது. ரோகிணி நட்சத்திரம் விருச்சிக ராசிக்கு உரிய பரிகாரத் தலமான இக்கோயில் இறைவி விளையாட்டாக சிவபெருமானின் திருவிழிகளை மறைத்தமையால் சாபம் ஏற்பட்டு கிளி ரூபமாகி அந்நிலை நீங்க அம்மை தை மாத மகர சங்கராந்தி காவிரியில் நீராடி சுயரூபம் அடைந்து சிவபெருமானை பூஜித்து தனது சாபத்தை நிவர்த்தி செய்து கொண்டதாக ஐதீகம்.
1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் அக்ஷ்ய திருதியை விழாவை முன்னிட்டு நட்சத்ரா குழுமத் தலைவரும், மத்திய பட்ஜெட் தயாரிப்பு குழு உறுப்பினருமான பொருளாதார நிபுணர் குரு.சம்பத்குமார் ஏற்பாட்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய கொடிமரம் நிர்மாணம் செய்யப்பட்டு அதன் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். விழாவில் தருமபுரம் ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் திருஞானசம்பந்தர் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu