திருவிடைமருதூரில் திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

திருவிடைமருதூரில் திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
X

திருவிடைமருதூரில் அண்ணா படத்துக்கு மரியாதை செய்த திமுகவினர்

திருவிடைமருதூரில் திமுக சார்பில் அண்ணா நினைவு தினத்தையொட்டி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் திருவிடைமருதூர் கலைஞர் பாசறை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப் படத்திற்கு தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் பேரூர் கழகச் செயலாளருமான ஜெயபால், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய துணை பெருத்தலைவர் கருணாநிதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு தொகுதி ஒருங்கிணைப்பாளர் மணிமாறன், திருவிடைமருதூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மையச் செயலாளர் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!