திருவிடைமருதூர் அருகே பேருந்தில் மோதி வாலிபர் உயிரிழப்பு

திருவிடைமருதூர் அருகே பேருந்தில் மோதி வாலிபர் உயிரிழப்பு
X

விபத்தில் பலியான சேரன். 

திருவிடைமருதூர் அருகே பேருந்தில் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

திருவிடைமருதூர் வட்டம், கோட்டூரை சேர்ந்தவர் முருகையன் மகன் சேரன் (23). அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித் (24). இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் இரவு இரண்டு சக்கர வாகனத்தில் கஞ்சனூர் நோக்கி சென்றுள்ளனர். அப்போது துகிலி சாலை திருப்பத்தில் கும்பகோணத்தில் இருந்து குத்தாலம் நோக்கி வந்த அரசு பேருந்து மீது பைக் மோதி உள்ளது.

இதில் பேருந்தின் சக்கரத்தில் பைக் சிக்கியதால் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் சேரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் படுகாயமடைந்த ரஞ்சித், கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பந்தநல்லூர் போலீசார், சேரன் உடலை கைப்பற்றி திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!