கும்பகோணத்திலிருந்து ஆட்டோவில் கஞ்சா கடத்திய 5 பேர் அதிரடி கைது

கும்பகோணத்திலிருந்து ஆட்டோவில் கஞ்சா கடத்திய 5 பேர் அதிரடி கைது
X

ஆட்டோவில் கஞ்சா கடத்தி கைதான 5 பேர்.

கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோவில் பகுதிக்கு ஆட்டோவில் கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோவில் பகுதிக்கு கஞ்சா கடத்தி செல்வதாக நாச்சியார்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

தகவலின்பேரில் நாச்சியார்கோவில் போலீசார் கிருஷ்ணாபுரம் அருகில் வாகன சோதனை இருந்த போது, அவ்வழியாக கும்பகோணத்திலிருந்து நாச்சியாரும் சென்ற ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர்.

அதில் சுமார் 10 கிலோ கஞ்சா இருப்பது அறிந்து, ஆட்டோவில் வந்த, சோழபுரம், ராமானுஜபுரம், வள்ளுவர் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் சந்துரு (எ) சந்திரசேகர், திண்டுக்கல்லை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன், அழகேசன் மகன் அருண் பாண்டியன், செல்லதுரை மகன் பாலமுருகன் ஆகிய 4 பேரையும் ஆட்டோ ஓட்டி வந்த நாச்சியார் கோவில், திருநறையூர், சத்யா நகரை சேர்ந்த ரங்கசாமி மகன் சாமிநாதன் (எ) பாண்டியன் ஆகிய 5 பேரையும் நாச்சியார்கோயில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கும்பகோணத்திலிருந்து ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்தது அடுத்து கும்பகோணத்தில் உள்ள கஞ்சா வியாபாரிகளையும், எந்த ஊரில் இருந்து, வந்தது, எப்படி வந்தது என போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story