காவிரி ஆற்றில் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்

காவிரி ஆற்றில் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்
X

காவிரியாற்றில் நாளை மாலைக்குள் தண்ணீர் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால், காவிரி ஆற்றில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்றும் பணி தீவிரம்.

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என அரசு தெளிவாக கூறி வந்தாலும், பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால், இன்னமும் பெருமளவில் பிளாஸ்டிக் கேரிபைகள் உபயோகப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு பின் குப்பைகளுக்கு செல்கின்றன. குப்பைகளுக்கு செல்லும் பைகள் நாளடைவில் நீர்நிலைகளில் தஞ்சம் அடைகின்றன. நீர் நிலைகளில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் தண்ணீர் செல்வதற்கு தடையாக மாறுகிறது, மேலும் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. இந்நிலைையில் காவிரி ஆற்றில் படித்துறை உள்ளிட்ட இடங்களில் பெருமளவு சேர்ந்துள்ள குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
ai marketing future